

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேம் நடைபெற்று 6-ம் ஆண்டுகள் ஆனதையொட்டி சங்காபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேம், 1,008 சங்காபிஷேகமும், உற்சவமூர்த்திக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.