திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

நாளை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது
Published on: 
Summary

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபம் ஏற்ற தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 4,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் திரியை பக்தர்கள் வழங்கினர். நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மகா தீபம்

தீபத்திருவிழாவில் உச்ச நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் கொப்பரை 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரத்து 500 கிலோ நெய் வாங்கப்பட்டு உள்ளது. 1000 மீட்டர் திரியை (காடா துணி) பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர்.

நாளை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் ஈசன் ஜோதி பிழம்பாய், தீச்சுடராய் அனைத்து பக்தர்களுக்கு சமமாக காட்சி தருவார். இந்த மகா ஜோதி தரிசனம் திருவண்ணாமலை சுற்றுப்பகுதியில் 15 கிலோ மீட்டர் வரை தெரியும்.

X