சஷ்டியையொட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று சஷ்டியையொட்டி சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர்
சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர்
Published on: 

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சஷ்டியையொட்டி சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல விருத்தாசலம் வேடப்பர், ஆதி கொளஞ்சியப்பர், முதனை செம்புலிங்க அய்யனார், விருத்தகிரிகுப்பம், ஆலிச்சிக்குடி கிராமங்களில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில்களில் நேற்று சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com