தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று நடக்கிறது

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு தங்கத் தேர் பவனி நடக்கிறது.
அலங்கார உபகார மாதா
அலங்கார உபகார மாதா
Published on

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் 10 நாட்கள் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடக்கிறது.

காலை 6.15 மணிக்கு திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிள்ளைத்தோப்பு பங்குதந்தை அமுதவளவன் தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார்.

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனை நிகழ்ச்சிக்கு திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை லியோன் கென்சன் தலைமை தாங்குகிறார். நாகர்கோவில் பங்குத்தந்தை ஜான்சன் அருளுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு சூசையப்பர் தங்க தேர் பவனியும் நடக்கிறது.

10-ம் நாள் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட நிதி காப்பாளர் அலாய்சியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். மறைமாவட்ட அனைத்து பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் அருளுரையாற்றுகிறார்.

காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்கு தந்தைகள் லெனின், சுரேஷ், சிபு, பங்கு பேரவை துணை தலைவர் மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com