சோளிங்கர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம்- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
சோளிங்கர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம்
Published on: 
Summary

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள், அமிர்தவல்லி தாயார் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் தொட்டாச்சார்யார் தனித்தனி கேடயங்களில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள கருங்கல் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள்.

திருக்கல்யாண வைபவம்

தொடர்ந்து உற்சவர் மங்கள வாத்தியங்களுடன் காசி யாத்திரை புறப்பாடு கண்டருளினார். பின்னர் அமிர்தவல்லி தாயாருக்கும் ஸ்ரீ பக்தோசிதப் பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

X