சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா: பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் முன்பு பொங்கல் வைத்து 251 பெண்கள் வழிபாடு நடத்தினர்.
கோவில் முன்பு பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்திய காட்சி.
கோவில் முன்பு பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்திய காட்சி.
Published on

வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலையில் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து அமமன் கரகம் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பூசாரி வடிவேல் கன்னத்தில் 7 அடி நீள அலகு குத்தி கரகம் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அப்போது அக்னிசட்டி எடுத்து இளைஞர்கள் நடனமாடி வந்தனர். அதன்பிறகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவில் முன்பு பொங்கல் வைத்து 251 பெண்கள் வழிபாடு நடத்தினர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com