42 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்

முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் கடவூர்- கணவாய் பிரிவு சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
42 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்
Published on

முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் கடவூர்- கணவாய் பிரிவு சாலை அருகே புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த கோவிலில் 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி முதற்கால, 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com