வீராம்பட்டினம் கோவிலின் முக்கிய விழாக்கள்

விநாயகர் சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வீதி உலா வருவார்.
Veerampattinam
வீராம்பட்டினம் கோவில்
Published on

தை மாதம்

(ஜனவரி) தைப் பொங்கல், பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று ஒரு நாள். உழவுக்கு அதிகம் பயன்படுவது காளை மாடு, பால் கொடுப்பது பசுமாடு. (ரிஷபம் என்றால் மாடுகளைக் குறிக்கும்) மாடுகளுக்குச் சிறப்புச் செய்யவும் அந்த மாடுகளைப் போற்றிப் பாதுகாக்கவும், மாட்டுப் பொங்கல் அன்று ரிஷபம் வாகனத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் அம்பாள் வீதி உலா நடைபெறும். இரவு தெருக்கூத்து நடக்கும்.

மாசிமகம்

தீர்த்தவாரித் திருவிழா, வீராம்பட்டினத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மாசி மகத்துக்கு வீராம்பட்டினம் வந்து கடற்கரையில் அனைத்துச் சாமிகளுக்கும் தீர்த்த வாரி திருவிழா நடைபெறும். அன்று காலையில் அம்மன் குளத்துமேட்டில் நின்றுகொண்டு வெளியூர் சாமிகளை வரவேற்பு கொடுக்கும். கடற்கரையில் பாட்டுக் கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கும்.

பங்குனி உற்சவம்

பங்குனி உத்திர நாளில் காலையில் அன்று ஊரில் பால்குடம். பால்காவடி 4 சக்கர வாகனங்களை இழுத்துக் கொண்டு வீதி உலா வருவார்கள். ஆண்களும், பெண்களும் மஞ்சள் ஆடை அணிந்து இருப்பார்கள். அன்று இரவு முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வருவார்.

ஆடிமாதம்

ஆடிமாதம் முதல் வெள்ளி முதல் 6 வெள்ளி வரை திருவிழா நடைபெறும். ஆடிமாதம் 3-வது வெள்ளிக் கிழமைக்குப்பின் திங்கட்கிழமை குட்டியாண்டவர் கோவிலுக்கு குதிரை விட்டு விழா நடைபெறும். ஊரில் உள்ள மக்கள் பெண்கள் பொங்கல்வைத்துப் பூசை செய்வார்கள் இரவில் தெருக்கூத்து நடைபெறும்.

ஆவணி மாதம்

விநாயகர் சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வீதி உலா வருவார்.

புரட்டாசி மாதம்

விசயதசமி (அம்புத் திருவிழா) அன்று இரவு சிங்கம் வாகனத்தில் அம்மன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் புறப்பட்டு ஊருக்கு வடக்குப் பகுதியில் வாழை மரம் நட்டு இருக்கும். அங்குப் போய் வாழை மரத்தில் அம்பு குத்துவார்கள்; அம்மன் வீதி உலா வருவார். அம்பு குத்திய வாழை மட்டையை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் செல்வம் பெருகும் நோய் நொடி அண்டாது என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம்

தீபத் திருவிழா திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். அன்று இரவில் வீராம்பட்டினத்தில் சொக்கப்பனைக் கொளுத்துவார்கள். கோவிலுக்கு நடுவில் பனை ஓலையால் கூண்டு கட்டி இருக்கும். அம்மன் வந்த பின் கூண்டைக் கொளுத்துவார்கள். பின்னர் அம்மன் எரிந்து விழுந்த கூண்டைச் சுற்றி வந்த பின் அம்மன் வீதி உலா வரும். எரிந்து விழுந்த துண்டுகளை மக்கள் எடுத்து கொண்டு போய் தங்கள் வீட்டில் சொறுகி வைப்பார்கள். அதனால் வீட்டில் நலமும் வரவும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை, மேலும் தீய சக்திகள் பேய், பிசாசுகள் அண்டாது என்று மக்கள் நம்புகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com