சுயம்புலிங்கமாக தோன்றிய சுந்தரேசுவரர்

மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்றொரு பெயரும் உண்டு.
சுயம்புலிங்கமாக தோன்றிய சுந்தரேசுவரர்
Published on
Summary

சிவபெருமான் நடனம் ஆடியதாகச் செல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ‘வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கும் மட்டும் வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார். கருவறையில் சுந்தரேசுவரர் சிவலிங்க உருவில் காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தானாகத் தோன்றிய சுயம்பு லிங்கமாகும்.

மதுரை என்று சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருபவள் அன்னை மீனாட்சி தான். அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னிதியே முதன்மை பெற்றது. அதனால்தான் முதலில் மீனாட்சியை வணங்கிய பிறகே சுந்தரேசுவரரை வழிபடும் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது.

சிவபெருமான்

சிவபெருமான் தனது கனவில் வந்து கூறியதால் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டை அழித்து இன்றைய மதுரை மாநகரை உருவாக்கியவன் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன்.

மதுரையை அழிக்க வருணன்

மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகங்களையும் ஏவியபோது அதைத் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தனது சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி மதுரையை காத்தன. இதனால்தான், ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயர் மதுரைக்கு ஏற்பட்டது.

கோபுரங்கள்

இந்தக் கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளைக் கொண்ட பிரம்மாண்டமான நான்கு கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் தெற்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் 160 அடி மட்டுமே.

சிவபெருமான் நடனம்

சிவபெருமான் நடனம் ஆடியதாகச் செல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ‘வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கும் மட்டும் வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார்.

சுந்தரேசுவரர் சிவலிங்க உருவில் காட்சி

கருவறையில் சுந்தரேசுவரர் சிவலிங்க உருவில் காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தானாகத் தோன்றிய சுயம்பு லிங்கமாகும்.

திருநாவுக்கரசரின் திருத்தாண்டக தேவாரப் பாடலில் இதற்கான ஆதாரத்தைக் காண முடிகிறது. இந்தக் கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம்.

மீனாட்சி அம்மன் சிலை

இத்தல சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறார். இக்கோவில் மீனாட்சி அம்மன் சிலை மரகத கல்லால் ஆனது. அதனால் மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்றொரு பெயரும் உண்டு. இது தவிர, அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவில்

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தத் திருவிளையாடல் காட்சிகள் கோவில் சுவாமி சன்னிதி பிராகாரங்களில் சிற்பங்களாக இன்றும் காட்சி தருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com