புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

பெருமாளின் ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. பொதுவாக, பெருமாள் கோவில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம்.
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
Published on

கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

(புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார்.

எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.

அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகும்.

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

முதல் வணக்கம் பத்மாவதி தாயாருக்கு

திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள்.

இந்த வழிபாட்டு முறை சரியானது அல்ல.

முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான்.

இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.

என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார்.

திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள்.

இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா?

அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள்.

பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com