அம்மனுக்கு விருப்பமான கூழ்

நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை.
அம்மனுக்கு விருப்பமான கூழ்
Published on: 

வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.

தை முதல் ஆனி வரை உத்தராயனம்.

இதுவே தேவர்களின் பகல் காலமாகும்.

ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம்.

இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும்.

நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான்.

ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.

கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை.

இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள், ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி,

ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com