12 ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவர் வழிபாடு

பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
12 ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவர் வழிபாடு
Published on

பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். மேஷம் தலை, ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com