கனவுகளின் பலன்கள்

ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும்.
கனவுகளின் பலன்கள்
Published on

மனிதனின் மனம் ஒன்று தான். ஆனால் உணர்வுகளுக்கு எண்ணிக்கை கிடையாது. மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ள மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உணர்வு மனம்: நாம் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் உணர்வை மாற்றிக் கொள்வது உணர்வு மனம். உதாரணமாக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.

2. அடி மனம்: ஒருவரின் இயல்பான மனதை குறிப்பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.

3. ஆழ்மனம்: ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவரின் ஆழ்மனம் செயல்படும் போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம் ? எதற்காக பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கி போக வேண்டும் போன்ற அனைத்து கேள்விக்கும் விடை பெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ் மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஐ.ஆனந்தி
ஐ.ஆனந்தி
X

Maalai Malar
www.maalaimalar.com