காமன்வெல்த் குத்துச்சண்டை- இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சாகர் 
சாகர் 
Published on

பர்மிங்காம்:

காமன்வெல்த் விளையாட்டு குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அலாவத், இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com