மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் திரும்ப தயார்: இப்ராஹிமோவிச்

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி விரும்பினால் மீண்டும் அந்த அணிக்காக விளையாட தயார் என இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார்.
இப்ராஹிமோவிச்
இப்ராஹிமோவிச்
Published on

சுவீடன் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தவர் இப்ராஹிமோவிச். 37 வயதாகும் இவர் 2016-17 சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அறிமுக சீசனிலேயே 28 கோல்கள் அடித்து அசத்தினார்.

துரதிருஷ்டவசமாக தொடர் காயம் காரணமாக  மான்செஸ்டர் யுனைடெட் அணி அவரை வெளியேற்றியது. இதனால் அமெரிக்கா சென்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி விரும்பினால் நான் தயார் என்று இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இப்ராஹிமோவிச் கூறுகையில் ‘‘நான் எளிதாக மீண்டும் பிரிமீயர் லீக்கில் விளையாட முடியும். ஆகவே, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு நான் தேவை என்றால், இங்கே (பிரிமீயர் லீக்) இருப்பேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com