வீடியோ: என் வழி தனி வழி.. பாட்டில் மூடி சேலஞ்சை தன் ஸ்டைலில் செய்த யுவராஜ் சிங்

சமூக வலைத்தளங்களில் தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலை இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன் ஸ்டைலில் செய்து காட்டியுள்ளார்.
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
Published on

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது.

டென் (10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், வாக்குவம் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

அந்த வரிசையில் தற்போது ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ பிரபலமாகி வருகிறது. பாட்டில் ஒன்று முன் இருக்க, ‘கிக்’ மூலம் அந்த மூடியைக் கழற்ற வேண்டும் இதுதான் சேலஞ்ச்.

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

பாட்டில் ஒன்று யுவராஜின் எதிரே உள்ளது. அதன் மூடியினை சரியாக குறிப்பார்த்து யுவராஜ் பேட்டிங் செய்கிறார். அவருக்கு போடப்பட்ட பந்து சரியாக பாட்டிலின் மூடி மீதுப்பட்டு ஓபன் ஆகிவிடுகிறது. இவரது ஸ்டைல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

மேலும் பல்வேறு தரப்பினரும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் யுவராஜை கமெண்ட்டுகளில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com