

மும்பையில் நடைபெற்ற ஃபிராஸ்ட் & சல்லிவன் 2017 விருது வழங்கும் விழாவில் யுப் டிவி சேவைக்கு இந்திய கம்பெனீஸ் டூ ஆக்ஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல ஓவர் தி டாப் தரவுகளை வழங்கி வரும் யுப் டிவி இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் தரவுகளை வழங்கி வருகிறது.
யுப் டிவி சேவையில் 14 மொழிகளில் மொத்தம் 250 சேனல்களை வழங்கி வருகிறது. இவற்றில் நேரலையில் காணும் வசதியும், பல்வேறு சாதனங்களில் பிரீமியம் தரவுகளை வழங்குகிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஓவர் தி டாப் தரவுகளில் மிகவும் வித்தியாச தரவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்தியாவில் அதிக வரவேற்பை பெறும் வெவ்வேறு மொழி தரவுகளை வழங்குவதில் யுப் டிவி கவனம் செலுத்தி வருகிறது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள தரவுகளை வழங்குகிறது.
ஃபிராஸ்ட் & சல்லிவன் நிறுவன மூத்த தலைவர் வித்யா எஸ். நாத் யுப் டிவிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் யுப் டிவி சந்தையில் மிகவும் வித்தியாசமான நிறுவனமாக இருப்பதோடு, வாடிக்கையாளர்கள் விரும்பும் தரவுகளை அவர்கள் விரும்பும் மொழியில் வழங்குகிறது என தெரிவித்தார்.
இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகமானது முதல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பிரீமியம் தரவுகளை ஓவர் தி டாப் தளத்தில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வழங்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு மூலம் வித்தியாச தரவுகளை வழங்குவதே இந்நிறுவனத்தை மற்ற நிறுவனங்களில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தை ஓவர் தி டாப் தளம் மாற்றியமைத்து வரும் நிலையில், வரும் ஆண்டுகளில் யுப் டிவியை முன்னணி இடத்திற்கு எடுத்துச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிநவீன தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
விருதினை பெற்று கொண்ட யுப் டிவி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான உதய் ரெட்டி, 'யுப் டிவி குழுமத்தினர் சார்பாக இந்த விருதினை பெறுவதில் பெருமை கொள்கிறேன். மேலும் எங்களது சேவைக்கு விருது வழங்கும் முடிவை எடுத்த தேர்வு குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.' என தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன் யுப் டிவி சேவையை துவங்கும் போது, வழக்கமான தொலைகாட்சி அனுபவத்தை மாற்றியமைத்து ஒருவர் தான் விரும்பும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் பார்க்க வைக்கும் திட்டம் வெறும் கனவாகவே இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை பல தடைகளை கடந்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இந்த அங்கீகாரம் எங்களை பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொள்ளவும், கூடுதலாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழி செய்துள்ளது எனவும் அவர் கூறினார்.
ஃபிராஸ்ட் & சல்லிவன் விருதுகள் நிறுவனங்களை பிராந்திய மற்றும் சர்வேதச அளவில் தரவுகளை வழங்கும் நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் அட்லான்டாவை சேர்ந்த யுப் டிவி ஓவர் தி டாப் வீடியோ தளத்தில் சேவை வழங்கும் முதல் நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பிராந்திய மொழி தரவுகளை உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் மிக எளிதாக தரவுகளை இயக்க முடியாமல் இருக்கும் இடர்பாட்டை குறைக்கிறது.