

ஆற்காடு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு அண்ணா சிலை அருகே இன்று காலை 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது. உடனே போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Tamilnews