கர்நாடகா: ஜெர்மனி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கார்நாடக மாநிலத்தில் ஆராய்ச்சிக்காக வந்திருந்த ஜெர்மனி நாட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா: ஜெர்மனி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Published on

பெங்களூர்:

இந்திய கலாச்சாராம், மொழி, வாழ்க்கைமுறை முதலியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து பலர் நம் நாட்டிற்கு வந்து தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் கர்நாடகம் மாநிலத்தின் பன்னிர் பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு ஆராய்ச்சி பணிகளுக்காக வந்துள்ளார்.

ஆசிரமத்திற்கு செல்வதற்காக மொகமது முஸ்தபா (19) என்பவரிடம் வழி கேட்டுள்ளார். உடனே அவர் அந்த மாணவிக்கு வழிகாட்டுவது போல் யாரும் இல்லாத இடத்தற்கு அழைத்து சென்று தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து போலிசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த வாலிபர் மனநலம் சரியில்லாதவர் என்றும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com