ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளரா?: மறுத்துள்ளார் யூனிஸ்கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பதவி ஏற்க இருப்பதாக வந்துள்ள செய்தியை யூனிஸ்கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளரா?: மறுத்துள்ளார் யூனிஸ்கான்
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் யூனிஸ்கான். டொமினிகாவில் நடைபெற்று வரும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

39 வயதாகும் யூனிஸ்கான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் உடன் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்கள், 33 அரைசதங்களுடன் 10046 ரன்கள் குவித்துள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள், 48 அரைசதங்களுடன் 7249 ரன்கள் அடித்துள்ளார். 25 டி20 கிரிக்கெட்டில் இரண்டு அரைசதங்களுடன் 442 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள யூனிஸ்கான், டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதுடன் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் அவர் பாகிஸ்தானின் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியின் ஆலோசகராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், “யூனிஸ்கானை எங்கள் நாட்டின் பயிற்சியாளராக நியமிக்க இருக்கிறோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’’ என்றார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகும் செய்தியை யூனிஸ்கான் மறுத்துள்ளார். இதனால் ஓய்வு பெற்றபின் சிறிது காலம் குடும்பத்துடன் ஓய்வு எடுத்தபின் அடுத்த கட்ட பணிகள் குறித்து யோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com