தொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை

தொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மின்னத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி கலா ( வயது 23) . இவர்களுக்கு 2 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கலாவிற்கும் ராஜீவ்காந்திக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த கலா வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலாவின் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com