பெண் கொடுக்க மறுத்த தாய்மாமனுக்கு அரிவாள் வெட்டு

பொள்ளாச்சியில் பெண் கொடுக்க மறுத்த தாய்மாமனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

கோவை:

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). தொழிலாளி. இவரது சகோதரி மகன் அரவிந்த் (24). சம்பவத்தன்று அரவிந்த் தனது தாய்மாமன் நடராஜிடம் சென்று அவரது பெண்ணை மணம் முடிக்க கேட்டார். இதற்கு நடராஜ் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து தனது மாமன் நடராஜை வெட்டினார். இதில் நடராஜ் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் நடராஜை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொடுத்த புகாரின் பேரில் அரவிந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com