நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: அரசியல்வாதிகளுக்கு எதிராக கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி

மதுரையில் அரசியல் வாதிகளுக்கு எதிராக கமல் ரசிகர்கள் ஒட்டி உள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: அரசியல்வாதிகளுக்கு எதிராக கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி
Published on

மதுரை:

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.

அதில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கமல் ரசிகர் மன்ற நிர்வாகியிடம் கேட்டபோது, அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சித்தால் மன்ற நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com