காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீண்டும் கைது

காஷ்மீர் மாநிலம், சோபோர் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீண்டும் கைது
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப் போவதாக இங்குள்ள சையத் அலி ஷா ஜீலானி, மிர்வாய்ஸ் உமர் பரூக், முஹம்மது யாசின் மாலிக் ஆகியோர்களின் அமைப்புகளை உள்ளடக்கிய பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

அவ்வகையில், சோபோர் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீநகர் அபி குசார் பகுதியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அலுவலகத்தில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாருக் இன்று வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். #tamilnews #YasinMalikarrested 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com