சியோமி தீபாவளி விற்பனை: முழு சலுகைகள்

இந்தியாவில் பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களின் தள்ளுபடி விற்பனை நிறைவுற்றதைத் தொடர்ந்து சியோமியின் அதிகாரப்பூர்வ தளத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது. இதில் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி தீபாவளி விற்பனை: முழு சலுகைகள்
Published on

புதுடெல்லி:

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நிறைவுற்றதைத் தொடர்ந்து பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 27) துவங்கிய சிறப்பு விற்பனை செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

சியோமி ஸ்மார்ட்போன்கள், அக்சசரீகள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில் வழங்கப்படும் முழு சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.


சியோமி Mi A1:


சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் விற்பனைக்கு வருகிறது. சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் சியோமியின் முதல் டூயல் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கிறது. 12 எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் எஃபெக்ட்களும் வழங்கப்பட்டுள்ளது.


ரெட்மி நோட் 4:


இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 4 சிறப்பு விற்பனையில் 3ஜிபி ரேம்+32 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு ரூ.1,000 தள்ளுபடி, 4ஜிபி ரேம்+64 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஏற்கனவே ரூ.10,999க்கு விற்பனை செய்யப்பட்ட 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் தற்சமயம் ரூ.9,999க்கும், 4 ஜிபி ரேம் ரூ.12,999-இல் இருந்து தற்சமயம் ரூ.10,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,500 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் 2ஜிபி+16 ஜிபி, 3ஜிபி+32 ஜிபி, 4ஜிபி+64 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் முறையே ரூ.6,999, ரூ.8,999 மற்றும் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Mi மேக்ஸ் 2:

சியோமி Mi மேக்ஸ் ஃபேப்லெட் ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 32ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.16,999க்கும் வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

சியோமி சாதனங்கள்:

- Mi ஹெட்போன்களுக்கு ரூ.300 தள்ளுபடி வழங்கப்பட்டு தற்சமயம் ரூ.2,699க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- சியோமி Mi இன்-இயர் ஹெட்போன் மற்றும் Mi கேப்சூல் இயர்போன்களுக்கு ரூ.100 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.4,99 மற்றும் ரூ.8,99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- பவர் பேங்க் சாதனங்களை பொருத்த வரை 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட Mi பவர் பேங்க் 2 ரூ.899 மற்றும் 20,000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 ரூ.1,799க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றிற்கு முறையே ரூ.300 மற்றும் ரூ.400 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

- சியோமி Mi ஏர் பியூரிஃபையர் 2 ரூ.1,500 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.8,499க்கும், ஏர் பியூரிஃபையர் பன்டிள் ரூ.2,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,998க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதர சலுகைகள்:

சியோமியின் Mi.com தளத்தில் ரூ.8000 மற்றும் அதற்கும் அதிகமான விலை கொடுத்து பொருட்களை வாங்குவோர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதலாக 5 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஒரு கார்டு கொண்டு வாங்கும் போது அதிகபட்சமாக வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வரை கேஷ்பேக் பெற முடியும். 

ரெட்மி நோட் 4 வாங்கும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் போது ரூ.400 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹங்காமா மியூசிக் மற்றும் பிளே (வீடியோ), இலவச ஹங்காமா மியூசிக் 12 மாதங்களுக்கும், ஹங்காமா பிளே மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. 

இத்த்துடன் ரூ.1 பிளாஷ் விற்பனை இன்று காலை 11.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. ரூ.1 பிளாஷ் விற்பனையில் வாடிக்கையாளர்கள் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 4, Mi கார் சார்ஜர் , Mi ரவுட்டர் 3சி வைட், 3ஜிபி ரேம் ரெட்மி 4, Mi ப்ளூடூத் ஸ்பீக்கர் மினி, Mi செல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A 2ஜிபி ரேம், Mi பேண்ட் HRX எடிஷன், Mi பிஸ்னஸ் பேக், 3ஜிபி ரேம் ரெட்மி நோட் 4, Mi கேப்சூல் இயர்போன், Mi வைபை ரிப்பீட்டர் மற்றும் பல்வேறு சாதனங்களை வழங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com