

சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தேதி மற்றும் சலுகைகள் சார்ந்த அறிவிப்பு சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சியோமி ஸ்மார்ட்போன்கள் மற்றும் உபகரணங்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுல்ளன. செப்டம்பர் 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கும் சிறப்பு விற்பனை செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. Mi செயலியில் பிட் டு வின் சலுகை தினமும் மதியம் 2.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.
சியோமியின் சிறப்பு விற்பனையில் ரூ.1 பிளாஷ் விற்பனை தினமும் காலை 11.00 மணி மற்றும் மாலை 5.00 மணிக்கு நடைபெறும். இந்த விற்பனையில் ரெட்மி நோட் 4, Mi ரவுட்டர் 3C, ரெட்மி 4, ப்ளூடூத் மினி ஸ்பீக்கர், Mi செல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A, Mi பேண்ட் HRX எடிஷன், Mi கேப்சூல் இயர்போன், Mi வைபை ரிப்பீட்டர், Mi பேக்பேக் மற்றும் Mi VR பிளே உள்ளிட்டவற்றை வென்றிட முடியும்.
விருப்பமுள்ளவர்கள் சியோமி தளத்தில் தி டியா ஹன்ட் பரிசுபோட்டியில் கலந்து கொண்டு சலுகை கூப்பன், ஸ்மார்ட்போன்கள் மற்றும் எஃப்-கோடு உள்ளிட்டவற்றை பெற முடியும். இவற்றை குறிப்பிட்ட காலகட்டம் வரை வெவ்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் செப்டம்பர் 26-ம் தேதி மதியம் 12.00 மணி முதல் Mi டோக்கென்களை கொண்டு சலுகை கூப்பன்களை பெற முடியும்.
Mi டோக்கென்களை கொண்டு சியோமி சாதனங்களை வாங்கும் போது ரூ.500 வரை தள்ளுபடி பெற முடியும். இதுமட்டுமின்றி Mi டோக்கென் கொண்டு எஃப்-கோடுகளை பெற்று அவற்றை Mi A1 பிளாக் 4H 64 ஜிபி, ரெட்மி 4 கோல்டு 2G 16ஜிபி மற்றும் ரெட்மி 4A கோல்டு 2G 16 ஜிபி உள்ளிட்ட ஸ்மாப்ர்ட்போன்களுக்கு தள்ளுபடி பெற முடியும்.
ரூ.1,500 வரை தள்ளுபடி செய்யப்பட்டும் ஸ்மார்ட்போன்கள்
- ரெட்மி 4 (2ஜிபி + 16 ஜிபி) (3ஜிபி + 32 ஜிபி) (4ஜிபி + 64 ஜிபி) விலை ரூ.6999 முதல் துவங்குகிறது
- Mi மேக்ஸ் 2 (4ஜிபி + 32 ஜிபி) (4ஜிபி + 64 ஜிபி) விலை ரூ.12,999 முதல் துவங்குகிறது
- ரெட்மி 4A (2ஜிபி + 16 ஜிபி) (3ஜிபி + 32 ஜிபி) விலை ரூ.5,999 முதல் துவங்குகிறது
- ரெட்மி நோட் 4 (3ஜிபி + 32 ஜிபி) விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது
- ரெட்மி நோட் 4 (4ஜிபி + 64 ஜிபி) விலை ரூ.10,999 முதல் துவங்குகிறது
சியோமி மற்ற சாதனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்
- Mi ஏர் பியூரிஃபையர் 2 விலை ரூ.8,999
- Mi 20000 எம்ஏஎச் பவர் பேங்க் விலை ரூ.1,799
- Mi 10000 எம்ஏஎத் பவர் பேங்க் விலை ரூ.899
- Mi ரவுட்டர் C விலை ரூ.899
- Mi வைபை ரிப்பீட்டர் விலை ரூ.899
- Mi பேண்ட் HRX எடிஷன் ரூ.1,299
இயர்போன் மற்றும் ஹெட்போன்
- Mi ஹெட்போன் கம்ஃபர்ட் வைட் விலை ரூ.2,699
- Mi இன்-இயர் ஹெட்போன் பேசிக் மேட் விலை ரூ.499
- Mi ப்ளூடூத் ஸ்பீக்கர் பேசிக் 2 விலை ரூ.1,799
- Mi கேப்சூல் இயர்போன் பிளாக் விலை ரூ.899
- Mi இன்-இயர் ஹெட்ஹோ ப்ரோ எச்டி சில்வர் விலை ரூ.1,799
சியோமி Mi ஸ்டோர் மற்றும் சியோமி ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் பண்டிகை கால சலுகைகள் வழங்கப்படும் என்பதால் ஸ்மார்ட்போன் மற்றும் உபகரணங்களை சலுகை விலையில் வாங்கிட முடியும். சிறப்பு விற்பனை செப்டம்பர் 24-ம் தேதி துவங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சியோமியின் Mi.com தளத்தில் ரூ.8000 மற்றும் அதற்கும் அதிகமான விலை கொடுத்து பொருட்களை வாங்குவோர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதலாக 5 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.