சி சீட் 262: இந்த டிவி வாங்குவதற்கு விலை உயர்ந்த கார்களையே வாங்கலாம்

உலகில் விலை உயர்ந்த தொலைகாட்சி பெட்டிகளை தயாரித்து வரும் சி சீட் நிறுவனத்தின் புதுவரவு தொலைகாட்சி சி சீட் 262. மிகப்பெரிய வைட்ஸ்கிரீன் 4K டிஸ்ப்ளே கொண்டுள்ள டிவியின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சி சீட் 262: இந்த டிவி வாங்குவதற்கு விலை உயர்ந்த கார்களையே வாங்கலாம்
Published on

வியன்னா:

சர்வதேச மின்சாதன சந்தையில் ஆடம்பர தொலைகாட்சிகளை தயாரிக்கும் நிறுவனமான சி சீட் நிறுவனத்தின் புதிய மாடல் டிவி வெளியிடப்பட்டுள்ளது. சீ சீட் 262 என அழைக்கப்படும் புதிய தொலைகாட்சி உலகின் மிகப்பெரிய வைட்ஸ்கிரீன் 4K டிவி என்ற பெருமையை பெற்றுள்ளது.  

ஆஸ்த்ரியாவை சேர்ந்த சி சீட் நிறுவனம் போர்ஷ் வடிவமைப்பு கொண்டிருந்த 201 இன்ச் அவுட் டோர் எல்இடி டிவிக்காக 'பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் 2012' எனும் விருதினை பெற்றது. புதிய 262 மாடல் எல்-அகௌஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதில் மொத்தம் பத்து உயர்-ரக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

20.16 அடி அகலம் கொண்ட சி சீட் 262, உயரத்தில் 8.44 அடி உள்ளது. இதன் கருப்பு நிற எல்இடி தொழில்நுட்பம் 5,000:1 வீதத்தில் 800 நிட் பிரைட்னஸ் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 4K மீடியா சர்வெர் கொண்ட சி சீட் 262 சினிமா அனுபவத்தை வழங்க டிவியின் மானிட்டர் விசேஷ துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. ரிமோட் பட்டனை கிளிக் செய்ததும் திரை தானாக அவிழ்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.    

இத்தகைய டிவியை பொருத்தும் இடவசதி கொண்டவர்கள் 800 கிலோ எடை கொண்ட இந்த டிவையை 5,49,000 டாலர்களுக்கு வாங்க முடியும். இதன் இந்திய மதிப்பு ரூ.3,53,91,285 ஆகும். இதில் டிவியை பொருத்தும் கட்டணம் மட்டும் 38,500 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,81,902.50 ஆகும். சுமார் மூன்று கோடியே ஐம்பது லட்சம் கொடுத்து டிவி வாங்க தயார் என்பவர்களுக்கு டிவி தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com