இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. முக்கியத்துவம் என்ன?

இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்றும் 5 நாடுகளில் ஐக்​கிய அரபு அமீரகம் உள்ளது.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்..  முக்கியத்துவம் என்ன?
Published on

இந்தியாவிற்கு பலத்த பாதுகாப்பும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பக்கபலமாக ஐக்​கிய அரபு அமீரகம் செல்லப்பட்டு வருகிறது. இந்தியாவும் ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே நட்பு

இந்தியா - ஐக்​கிய அரபு அமீரகம் தொடர்ந்து நட்பு நாடாக விளங்கி வருகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்றும் 5 நாடுகளில் ஐக்​கிய அரபு அமீரகம் உள்ளது.

ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. மேலும் இந்த போரில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை விட அமீரகம் மீது ஈரான் குறிவைத்தது அதிகம்.

அமெரிக்கா போரின் போது 500 க்கு மேற்பட்ட ஏவுகணைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்களை யுஏஇ மீது ஈரான் ஏவி தாக்குதல் நடத்​தி​யுள்​ளது.

யுஏஇ-யின் ஃபுஜை​ரா, கோர் ஃபக்​கன் ஆகிய துறைமுகங்கள் எரிசக்தியை பூர்த்தி செய்வதால் இந்த தாக்குதகள் போக்குவரத்தை பாதித்துள்ளன.

இந்த நிலையில் தான் ஐக்கிய அரபு இந்தியா - ஐக்​கிய அரபு அமீரகம் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் கடந்த ஜனவரி மாதம் இந்திய வந்துள்ளபோது பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான படிவத்தில் 6 மாதத்திற்குள் கூட்டாண்மை ஒப்பந்தம் செய்வது குறித்து விருப்பத்துடன் கையெழுத்திட்டார்.

மேலும் வரும் 18 ஆம் தேதி நரேந்திர மோடி நெதர்லாந்து செல்லும் வழியில் அபுதாபி சென்று முந்​ரா- ஃபுஜை​ரா- அ​காபா ஆகிய புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளபடும் என கூறப்படுகிறது.

ஜோர்​டானின் பாஸ்​பேட் மற்​றும் பொட்​டாஷ் சுரங்​கங்​களைச் செங்​கடலில் உள்ள அகாபா துறை​முகத்​துடன் இணைக்க 360 கி.மீ நீள ரெயில் பாதையை அமைக்க 2.3 பில்​லியன் டாலர் மதிப்​பிலான ஒப்​பந்​தத்தை அமீரகம் கடந்த மாதம் இறுதி செய்தது. இது இந்தியாவின் உரத்தயாரிப்பிற்கு முக்கியமாவை என்றும் கூறியுள்ளது.

இதனிடையே இந்​தியா- அமீரகம் இடையே​யான பாது​காப்பு மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுப்​படும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com