பனிப்பிரதேசமாக மாறிய உலகின் மிக வறண்ட அட்டகாமா பாலைவனம் - எப்படி?

ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் எப்படி வந்தது என்பதே இதில் மறைந்துள்ள கேள்வி.
அட்டகாமா பாலைவனம்
அட்டகாமா பாலைவனம்
Published on
Summary

தென் அமெரிக்க நாடான சிலியில் அட்டகாமா என்ற பாலைவனம் அமைந்துள்ளதுதென். உலகின் மிக வறண்ட பாலைவனம் இதுவாகும். இந்த பாலைவனத்தை திடீரென பனிப்படலம் போர்த்தியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தில்.

புகைப்படங்கள்

பனிப்புயல் காரணமாக பாலைவனத்தின் வறண்ட பரப்பை பனி போர்த்தி பனிப்பிரதேசம் போல காட்சியளிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 6 பனிப்புயலுக்கு முன் பாலைவனம் வறண்ட நிலையில் இருந்த சாட்டிலைட் புகைப்படம், ஆகஸ்ட் 14 மற்றும் 19 இல் பனிப்புயலுக்கு பின் பனி போர்த்திய நிலையில் பாலைவனம் இருந்த சாட்டிலைட் புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு குறுகிய காலத்தில் நேர்ந்த நேரெதிர் மாற்றம் குறித்து பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் எப்படி வந்தது என்பதே இதில் மறைந்துள்ள கேள்வி.

அட்டகாமா பாலைவனம்
அட்டகாமா பாலைவனம்

பனிப்புயல்கள்

நாம் (இந்தியா) பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இருக்கிறோம். பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள சிலி உள்ளிட்ட நாடுகளில் இது பனிக்காலம். இந்த பனிப் படலம் ஏற்பட்ட பின்னர் மற்றொரு புயல் ஆகஸ்ட் அன்று பாலைவனத்தை தாக்கியது. இதனால் பாலைவனம் மேலும் பனிப்படலாமாக காட்சி அளித்து வருகிறது.

கடந்த ஆகஸ்டில் இந்த பனிப்புயல்களானது சிலி உட்பட 7 லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஊடே செல்லும் ஆண்டெஸ் மலைப்பகுதியில் இருக்கும் பனியை, அட்டகாமா பாலைவனம் அமைந்துள்ள பசிபிக் கரை வரை கொண்டு வந்துள்ளது.

பெரும்பாலும் வறண்டு காணப்படும் அட்டகாமா பாலைவனம் அனைத்து பனிக்காலத்திலும் இப்படி பனிப்பிரதேசமாக மாறுவதில்லை. ஆனால் கடந்த 2025 மற்றும் 2011 இல் இதுப்போன்ற பனிப்படலம் ஏற்பட்டது. மற்றைய ஆண்டுகளில் இவ்வாறு இல்லை.

அட்டகாமா பாலைவனம்
அட்டகாமா பாலைவனம்

பனிப்படலத்துடன் பாலைவனத்தில் இந்த காலகட்டத்தில் அதிகளவில் பூத்துக்குலுங்கும் காட்டு மலர்களும் வென் பனிக்கு மேட்சிங் ஆக அழகுற காட்சி அளிக்கிறது.

அட்டகாமா பாலைவனம் மட்டுமின்றி வடக்கு சிலியின் பல பகுதிகள் பனி போர்த்திய நிலையில் காணப்படுகிறது. நாசா எடுத்த இந்த பனி படர்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அட்டகாமா பாலைவனம்

அட்டகாமா பாலைவனம்
அட்டகாமா பாலைவனம்
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com