பேரழிவுகளும்..., 26-ந்தேதியும்...

வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகள் மாதத்தின் பிற தேதிகளிலும் அதிகமாக நடந்துள்ளன.
இயற்கை பேரழிவுகள்
இயற்கை பேரழிவுகள்
Published on

பெரும்பாலான பேரழிவுகள் 26-ந்தேதி–யிலேயே நடந்துள்ளன. அதன் விவரம்-

2001-ம் ஆண்டு ஜனவரி 26 : புஜ் / குஜராத் நிலநடுக்கம் (இந்தியா)

2003 டிசம்பர்26: பாம் நிலநடுக்கம் (ஈரான்)

2004 டிசம்பர் 26: இந்தியப் பெருங்கடல் சுனாமி (இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்)

2005 ஜூலை 26: மும்பை பெருவெள்ளம் (இந்தியா)

2006 மே 26: ஜாவா/யோக்யகர்த்தா நிலநடுக்கம் (இந்தோனேசியா இந்த நாளிலும் தாக்கம் நீடித்தது)

2006 டிசம்பர் 26: ஹெங்சுன் நிலநடுக்கம் (தைவான்)

2006 மே 26: ‘ஐலா’ புயலின் தாக்கம் & கடுமையான வெள்ளப்பெருக்கு (இந்தியா, பங்களாதேஷ்)

2015 அக்டோபர் 26: இந்து குஷ் நிலநடுக்கம் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா)

2018 ஆகஸ்ட்26: ஈரான்-ஈராக் எல்லை நிலநடுக்கம் (ஈரான்)

2019 டிசம்பர் 26: ‘பான்போன்’ (உர்சுலா) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)

2022 செப்டம்பர் 26: ‘நொரு’ (கார்டிங்) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)

2024 மே 26: ‘ரெமால்’ சூறாவளிப் புயல் (இந்தியா & பங்களாதேஷ்)

இந்தியாவை உலுக்கிய 3 மிகப்பெரிய பேரழிவுகள்

2001 ஜனவரி 26 குஜராத் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த மிகச்சக்திவாய்ந்த நிலநடுக்கம், குஜராத்தின் புஜ் மற்றும் கட்ச் பகுதிகளை ஒட்டுமொத்தமாக உருக்குலைத்தது. சுமார் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின; பல லட்சக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

2004 டிசம்பர் 26 இந்தியப் பெருங்கடல் சுனாமி: சுமத்ரா அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.1 முதல் 9.3 வரையிலான அதிதீவிர நிலநடுக்கம், ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான்-நிகோபார் கடலோரப் பகுதிகளைச் சூறையாடியதோடு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளையும் சீரழித்தது. இந்த கோரத் தாண்டவத்தில் உலகளவில் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.

2005 ஜூலை 26 மும்பை பெருவெள்ளம்: மும்பையில் பெய்த வரலாறு காணாத மழை, நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. சாண்டாக்குரூஸ் பகுதியில் ஒரே நாளில் 944 மி.மீ மழை பதிவாகி பேரழிவை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவுகளாகப் பார்க்கப்படும் இந்த மூன்றும் வெறும் 4½ ஆண்டுகளுக்குள்ளேயே, அதுவும் 26-ந் தேதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. இது ஒரு மர்மத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது அறிவியல் பூர்வமாக உண்மையல்ல; இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகள் மாதத்தின் பிற தேதிகளிலும் அதிகமாக நடந்துள்ளன.

உதாரணத்திற்கு 1960-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி சிலி நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி ஜப்பான் சுனாமி, 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ல் நேபாள நிலநடுக்கம், 2005-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தெடெஹி காஷ்மீர் நிலநடுக்கம் போன்றவற்றை கூறலாம்.

நிலநடுக்கம், புயல், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் பூமியின் புவித்தட்டு நகர்வுகள் மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படுகின்றன.

நாட்காட்டியின் தேதிகளுக்கும், புவியியல் மாற்றங்களுக்கும் எந்தவித அறிவியல் தொடர்பும் இல்லை. எனவே, 26-ந் தேதிக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் இடையே எவ்வித அறிவியல் தொடர்பும் இல்லை; இது முற்றிலும் ஒரு தற்செயலான ஒற்றுமையே என்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com