சீனாவில் சுவாரசியம்: வனவிலங்குகளுக்கும் வந்துவிட்டது நர்சரி பள்ளி

சீன வனவிலங்கு மழலையர் பள்ளியில் சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு எல்.கே.ஜி பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
China wildlife nursery school
Published on
Summary

சீனாவின் லெஹே லெடு வனவிலங்கு பூங்காவில், புதிதாக சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு எல்.கே.ஜி வகுப்புகளை நடத்தும் சோங்கிங் மழலையர் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யோங்சுவான் மாவட்டத்தில் 30 லட்சம் sq.km பரப்பளவில் லெஹே லெடு என்ற வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவறும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு அம்சமான டிரக் சஃபாரி நடத்தப்படுகிறது.

டிரக் சஃபாரி

இந்த டிரக் சஃபாரியின் போது, வாகனத்தை சுற்றிலும் இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு, அதின் உள்ளே சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்த பயணத்தின் போது டிரக்கில் கோழி இறைச்சி அல்லது மற்ற இறைச்சிகள் கட்டி தொடங்க விடப்படுகிறது.

இதையடுத்து சுற்றுலா பயணிகளுடன் அந்த வாகனம் சிங்கம், புலி மற்றும் கரடி என தனித்தனியாக பிரித்து பராமரிக்கப்படும் இடங்களுக்கு செல்கிறது.

அப்போது அந்த டிரக்கில் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை, வனவிலங்குகள் போட்டி போட்டுக் கொண்டு, வாகனத்தின் மேல் தாவி சாப்பிடுகின்றன.

இதனை வாகனத்தின் உள்ளே உள்ள சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், மிக அருகில் வனவிலங்குகளை நேராக பார்த்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மழலையர் தொடக்கப்பள்ளி

இந்த நிலையில் லெஹே லெடு வனவிலங்கு பூங்காவில் புதிதாக பிறந்துள்ள சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு, பள்ளிகளை போன்று புதிய பயிற்சி வகுப்புகளை அளிகும் சோங்கிங் மழலையர் தொடக்கப்பள்ளியை ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் பூங்கா ஊழியர்கள் நான்கு சிங்க குட்டிகள் மற்றும் ஒரு புலி குட்டியை பயிற்சி வகுப்பிற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த குட்டிகளுக்கு காலையில் பால் கொடுப்பது ஆரம்பித்து, விளையாட்டு பயிற்சி வகுப்புகள் வரை என அனைத்து விதமான பயிற்சிகளும் பூங்கா ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தனித்துவமான மழலையர் பள்ளியானது, சிங்கம் மற்றும் புலிகள் வளரும்போது, அவற்றின் இயல்பான உள்ளுணர்வையும் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய திறன்களையும் வலுப்படுத்த உதவும் என பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com