டிரம்பின் மகனை எங்கே கொல்வது? - ரூ.95 கோடி வெகுமதியை அறிவித்த ஈரான்

பேரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசு தொலைக்காட்சி ஒரு கானொளியை வெளியிட்டுள்ளது.
Iran video targets Barron Trump
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனான பேரன் டிரம்பை எங்கே கொல்வது என்ற இரண்டு நிமிட காணொளியை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது. மேலும் அந்த காணொளியில் டிரம்ப் மகனின் அன்றாட வாழ்க்கையின் நடமாட்டங்கள் விவரிக்கப்பட்டு வெகுமதியாக ரூ.95 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் மகள்

ஈரானிய அரசு தொலைக்காட்சி சேனல் கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளான மெலானியாவை குறிவைத்து ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது.

மெலானியாவை எங்கே கொல்வது என்ற தலைப்பிடப்பட்ட அந்த காணொளியில், அவர் தனது வாகன அணிவகுப்பில் பயணிப்பதும், நியூயார்க் நகரம் முழுவதும் உள்ள இடங்களுக்கு செல்வதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மெலானியா தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் ஆடம்பர வடிவமைப்பாளர் கடைகளும் அதில் அடையாளம் காட்டப்பட்டது. மேலும் அவர் வாங்கக்கூடிய ஆடைகளில் நரம்பு மண்டல நச்சு பொருளை பயன்படுத்தி விஷத்தை எவ்வாறு செலுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

டிரம்ப் எச்சரிக்கை

கடந்த வாரம் ஈரானுக்கு பொருளாதார பேரழிவு நாள் தொடங்கிவிட்டது என்றும், இஸ்லாமிய குடியரசு நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் உலகளாவிய ஒதுக்கப்பட்ட நாடாக மாறிவிடும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் தற்போது ஒரு காணொளி வெளியாகியுள்ளது.

டிரம்ப் மகனை குறிவைத்த ஈரான்

இந்த நிலையில் டிரம்பின் 20 வயது மகனான பேரன் டிரம்பை குறிவைத்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் வெளியிடப்பட்ட அந்த காணொளியை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.

பேரன் டிரம்ப் தனது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வந்து, எக்ஸ்பாக்ஸ் வலைதளம் மூலம் குரல் மற்றும் குறுஞ்செய்தி பயன்படுத்தி வருவதாகவும் அந்த காணொளி குறிப்பிட்டது.

மேலும், எக்ஸ்பாக்ஸ், ஃபிஃபா வீடியோ கேம்கள் மற்றும் டிஸ்கார்டில் உள்ள அவரது கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோ கூறியது. இந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு 95 கோடி ரூபாய் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியின் முடிவில், ‘இது வெறும் ஆரம்பம் தான். பேரன் டிரம்ப், எங்களுக்காக காத்திருங்கள்’ என்ற நேரடி எச்சரிக்கையுடன் அது நிறைவடைந்தது.

பாதுகாப்பு வளையம்

இதையடுத்து மெலானியா மற்றும் பேரன் ஆகிய இருவருக்கும், அமெரிக்க ரகசிய சேவையிடம் இருந்து 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை, நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர், நியூ ஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் பு புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ எஸ்டேட் உள்ளிட்ட டிரம்பின் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com