

கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்க்டிக் தீவில் ராணுவ தளவாடங்களை அமைக்க டிரம்ப் கடந்த மாதத்தில் ஒப்பந்தம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து பிரதேசம் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளால் எளிதில் தாக்கக்கூடிய நிலையில் இருப்பதாக கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார்.
மேலும் வர்த்தக போக்குவரத்து தளமான ஆர்க்டிக் தீவை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இணைத்துக்கொள்ள பல மாதங்களாக டிரம்ப் முயற்சி செய்து வந்தார்.
ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து பிரதேசமானது, 57,000 மக்கள் தொகையுடன் உலகின் மிகப்பெரிய தீவாக அமைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கையை எடுக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, டேனிஸ் மற்றும் பிற நேட்டோ நாடுகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலை தொடர்ந்து, கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்தான ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒத்துழைப்பதாக டென்மார்க் அறிவித்தது.
மேலும் இந்த ஒப்பந்தம், ஆர்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் என நம்புவதாக டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிடெரிக்சன் கூறினார்.
இந்த நிலையில் டென்மார்க்கில் நேற்று நடைபெற்ற வாக்களிப்பு கூட்டத்தில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், ஏழு உறுப்பினர்கள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர்.
இதன் காரணமாக 16-0 என்ற ஆதரவோடு அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் புதிய ராணுவ தளமான ‘கோல்டன் டோம்’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தம், வடமேற்கு கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான பிடுஃபிக் விண்வெளி தளத்தில், அமெரிக்கா தனது செயல்பாடுகளை நவீனமயமாக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.