ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தப்படாது- அமெரிக்க அதிபர் டிரம்ப்

போர் தொடர்பான பேச்சு வார்த்தைகள் பல வாரங்களாக முடங்கியுள்ளன.
America president Trump
Published on: 

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தன. கடந்த 6 மாதமாக அங்கு சண்டை ஓய்ந்தாலும், இருதரப்பிலும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் பல சிக்கல்கள் நீடிகின்றன.

குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ஆதிக்கத்தை விட்டுத் தர முடியாது என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக ஈரானில் இன்னும் போர் பதற்றம் தீராமல் உள்ளது.

போர் அச்சம்

இதற்கிடையே, அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ந்தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல இஸ்ரேலிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுத தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலை குறிவைத்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தக்கூடும் என ஈரானும், பல உலக நாடுகளும் கருதுகின்றன.

போர் தொடர்பான அச்சம் எழுந்துள்ள நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு இன்னும் தயாராகவே இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜெர்மன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறுகையில்," ஈரான் ராஜதந்திரத்திற்கான கதவுகளை இன்னும் மூடவில்லை. இடைத்தரகர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. போர் தொடர்பான பேச்சு வார்த்தைகள் பல வாரங்களாக முடங்கியுள்ளன.

அமெரிக்கா தொடர்ந்து ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளை முன்வைக்கிறது. டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி ‘முழுமையாக சரணடைதல்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதை எந்த ஈரானியரும் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள்" என்றார்.

தாக்குதல் இல்லை

இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளீர்களா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,'அத்தகைய திட்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்துவது முட்டாள்தன மானது’ என்று தெரிவித்தார்.

ஆனாலும் பின்னர் அவர், ‘இல்லை. இன்று எந்த தாக்குதலும் இருக்காது’ என்று தெளிவுபடுத்தினார்.

நெதன்யாகு வீடியோ

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில், "நாளை நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னதாக வாக்கெடுப்பை சீர்குலைக்க ஈரான் அல்லது அதன் ஆதரவு படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

ஆனால் ராணுவம் தற்காத்துக் கொள்ளவும், தாக்கவும் தயாராக உள்ளது. அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக கடுமையான பதிலடிகளை சந்திக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com