இந்தியா மீது 100% வரிவிதிக்க டிரம்புக்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றம்

ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.
டிரம்ப்
டிரம்ப்
Published on
Summary

இந்தியா உட்பட ரஷியா மற்றும் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மறைந்த செனட்டர் லின்ட்சே கிரஹாமின் பெயரிடப்பட்ட 'லின்ட்சே கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைவிதிப்புச் சட்டம் 2026' சபையில் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பில் 262-159 என்ற கணக்கில் நிறைவேறியது. இதில் டிரம்ப் கையெழுத்திட்டால் மசோதா சட்டமாக மாறும்.

மசோதா

இந்த மசோதா ரஷிய வங்கிகள், ரஷிய அதிகாரிகள் மற்றும் ரஷிய எரிசக்தி வர்த்தகம் மீது பல தடைகளை விதிக்கிறது. அதேநேரம் இந்தியா உட்பட ரஷியாவுடன் எண்ணெய், எரிவாயு வாங்குகின்ற பிரதான நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்காக ஏகபோக அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்குகிறது.

ரஷிய எண்ணெய் வாங்குகின்ற பிரதான இரு நாடுகள் இந்தியாவும், சீனாவும். நிறைவேற்றப்பட்ட மசோதா ரஷியாவிடம் எண்ணெய், எரிவாயு வாங்கும் 5 முதன்மை நாடுகள் இவற்றின் மீது அழுத்தத்தை அதிகரிக்க, இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் ரஷியாவிடம் இருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவில் இயற்கை எரிவாயு இராக்கிமதி செய்யும் நாடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.

உக்ரைன் போர்

உக்ரைன் நேட்டோ நாடுகளில் இணைவதை எதிர்த்து ரஷியா 2022 இல் தொடுத்த போர் முடிவின்றி நீண்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கர் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது பல பொருளாதார தடைகளை விதித்தன.

இருப்பினும் ஆசியாவில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தனது எண்ணெய், எரிவாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா தனது ஏற்றுமதி பொருளாதரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.

டெல்லி

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் கலந்துகொண்டு பல விஷயங்களை பேசிய நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான நிலைபாட்டை இந்தியா எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் நோக்கங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த மசோதா நேரடியாக இந்திய பொருட்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கவில்லை. மாறான அவ்வாறு வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கியுள்ளது.

முன்னதாக அதிபர் டிரம்ப் விதித்த பல வரிகள் அமெரிக்க நீதிமன்றங்களால் இடைக்கால தடைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்த மசோதா ஒரு மாற்றுப் பாதையாக பார்க்கப்படுகிறது.

ஈரான் மீது தடை நீட்டிப்பு

ரஷியாவுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகள் தவிர்த்து இந்த மசோதா ஈரான் மீது ஏற்கனவே உள்ள தடைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது.

ஈரான் உடன் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா, ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்து போரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று தொடங்கிய போர், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பதோடு சுருங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com