450 ட்ரோன்களால் அதிரடி தாக்குதல் - ரஷியாவுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
Russia vs Ukrain fight
Published on
Summary

ரஷிய தலைநகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மூன்று முக்கிய பிரிவுகள் சேதமடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல்

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள மடாலயம் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், மதகுரு ஒருவர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் படுகாயமடைந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

மேலும் உக்ரைனின் கீவ் மற்றும் சுமி பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் பதிலடி

இதையடுத்து பதிலடி தரும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது 450 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பு ஆலை ரஷியாவின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான எரிபொருளை வழங்குகிறது. மேலும் அதன் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் ஒரு பகுதி ரஷிய ராணுவத்திற்கும், விமான எரிபொருள் சேவைக்கும் வழங்கப்படுகிறது.

இதையடுத்து ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் பகுதியில், உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் ரஷிய தேர்தல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com