இரண்டு விமானங்களுக்கு ஒரே எண்கள்: அதிகாரியின் சாமர்த்தியத்தால் நடக்க இருந்த பெரிய விபத்து தவிர்ப்பு..!

இரண்டு பயணிகள் விமானம் மோத இருந்த நிலையில் கட்டுப்பாட்டாளர் சாமர்த்தியமாக செயல்பட்டார்.
Phoenix Airport plane crash
விமானங்கள் மோதலை தவிர்த்த கட்டுப்பாட்டாளர்.
Published on

அமெரிக்காவில் ஃபீனிக்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானம் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ள இருந்த நிலையில், கட்டுப்பாட்டாளரின் தலையீட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்கு சிகாகோ நகரத்தில் இருந்து 2482 என்று பெயர் கொண்ட ஒரு பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது.

அப்போது மோசமான வானிலை காரணமாக சிகாகோ விமானம் வருவதற்கு தாமதமானதால், அடுத்த பயணத்திற்கு தங்கள் விமானத்திற்கு பதிலாக வேறு விமானத்தை பயன்படுத்தும்படி சிகாகோ விமானம் கூறியது.

இரண்டு பயணிகள் விமானம்

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேறு விமானத்தை ஏற்பாடு செய்து, டிக்கெட் புக் செய்திருந்த பயணிகளிடம் 2482 என்ற மற்றொரு விமானத்தை பயன்படுத்துமாறு அறிவித்தனர்.

பின்னர் ஃபீனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து, பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயார் ஆனது. அப்போது மோசமான வானிலை காரணமாக தாமதமாக வந்த விமானம் தரையிரங்க வந்தது.

சாமர்த்தியமாக செயல்பட்ட கட்டுப்பாட்டாளர்

இதைத்தொடர்ந்து புறப்பட தயாராக இருந்த விமானமும், தரையிரங்க இருந்த விமானமும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கிக்கொள்ள இருந்தது. உடனே இதை சுதாரித்துக் கொண்ட விமான நிலைய கட்டுப்பாட்டாளர், வருகையில் உள்ள 2482 விமானம் மற்றும் புறப்படுகின்ற 2482 விமானம் என்று வேறுபடுத்தி காட்டினார்.

மேலும் விமான நிலைய கட்டுப்பாட்டாளர், வரும் விமானம் புறப்படும் விமானத்திற்கு மேலே நிலைத்திருக்குமாறும், புறப்படும் விமானம் மிக உயரமாக ஏறாமல், அவற்றின் பறக்கும் பாதைகள் இணையும்போது தேவையான செங்குத்து இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

இதனால் இரு விமானிகளும் பல மைல்கள் தொலைவில் இருக்கும்போதே, ஒரு விமானம் மற்ற விமானத்தை அறிந்து கொள்வதை கட்டுப்பாட்டாளர் உறுதி செய்தார்.

இதையடுத்து விமானங்கள் பாதுகாப்பாக ஒன்றையொன்று கடந்து சென்ற பிறகு, நிலைமையை கையாண்ட விதத்திற்காகக் கட்டுப்பாட்டாளரை விமானிகள் பாராட்டினார்.

அப்போது அந்த விமானி, நல்ல வேலை என்று கூறினார். அதற்கு கட்டுப்பாட்டாளர், பேரழிவாக இருந்திருக்கலாம், ஆனால் எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வு குறித்து கட்டுப்பாட்டாளர் கூறுகையில், “விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியது எனக்கு உதவியாக இருந்தது.

ஒரே அழைப்பு குறியீட்டைக் கொண்ட இரண்டு விமானங்கள் கிட்டத்தட்ட ஒன்றிணைவதை நான் பார்த்ததே இல்லை. அது மிகவும் நம்பமுடியாத ஒன்று,” என்று அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com