ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் - ரஷ்யா, உக்ரைன் உறுதியளித்தாக டிரம்ப் புதிய தகவல்!

எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் அல்ல, மாறாக ரஷ்யா - உக்ரைன் போரே காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் - ரஷ்யா, உக்ரைன் உறுதியளித்தாக டிரம்ப் புதிய தகவல்!
Published on

எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

மேலும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய கிழக்குப் போர் காரணம் இல்லை என்றும், ரஷ்யா - உக்ரைன் போரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளப் பதிவு

தனது ட்ரூத் ஷோஷியல் மீடியா பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,

“ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகளைத் தாக்கப் போவதில்லை என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டுள்ளது!

உலகின் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் ரஷ்யா - உக்ரைன் போர்தான், ஈரான் அல்ல ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ

இதனிடையே உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே கூறியுள்ளார்.

“உக்ரைனுக்கு எதிரான தனது கொடூரமான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யா மேலும் மேலும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.

உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை அவரால் தடுத்துவிட முடியும் என்றும், நமது ஒற்றுமையைச் சீர்குலைக்க முடியும் என்றும் அவர் நினைக்கிறார். அவர் நினைப்பது தவறு.” என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதே இப்போருக்கான முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com