ஹங்கேரி முன்னாள் பிரதமருக்கு சிக்கல்.. ஊழல் விசாரணையில் 19.5 மில்லியன் டாலர் பணம் கண்டெடுப்பு

பழைய பேருந்துகளை அதிக விலைக்கு வாங்கியதில் ஊழல் செய்ததாக கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஹங்கேரி முன்னாள் பிரதமருக்கு சிக்கல்.. ஊழல் விசாரணையில்  19.5 மில்லியன் டாலர் பணம் கண்டெடுப்பு
Published on: 
Summary

ஹங்கேரி முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பனின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

ஹங்கேரியில் விக்டர் ஓர்பானின் 16 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, கடந்த ஏப்ரல் மாதம் பீட்டர் மாக்யார் பிரதமர் பதவியேற்றார்.

புதிய அரசு முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டது.

ஊழல்

குறிப்பாக 2014 முதல் 2018 வரை ஹங்கேரியின் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த மிக்லோஸ் செஸ்டாக் மீதான ஊழல் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனம் மற்றும் அரசாங்க கட்டுமானத் திட்டங்களுக்காக பழைய பேருந்துகளை அதிக விலைக்கு வாங்கியதில் ஊழல் செய்ததாக கடந்த செப்டம்பர் மாதம் செஸ்டாக் கைது செய்யப்பட்டார்.

அவர் 37.2 மில்லியன் டாலருக்கும் (சுமார் 3,330 கோடி ரூபாய்) அதிகமான தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

பணம் கண்டெடுப்பு

இந்த சூழலில் அவர் தொடர்புடைய ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ​​காடுகள், கட்டிடங்கள் மற்றும் பல்வேறு ரகசிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19.5 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 1,750 கோடி) கண்டுபிடிக்கப்பட்டன.

தலைநகர் புடாபெஸ்ட் மற்றும் நாட்டின் மற்ற மூன்று பிராந்தியங்களில் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காடு, பண்ணைக் கட்டிடங்கள், கிடங்குகள், ஒரு வீடு ஆகியவற்றில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

வனப்பகுதிகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ரகசிய பெட்டகம் ஒன்றிலும் பணம் கண்டெடுக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பணத்தில் ஹங்கேரிய போரின்ட்கள், யூரோக்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் அடங்கிய கட்டுகள் இருந்தன. கைப்பற்றப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

12 கருவூல ஊழியர்கள் பணத்தை எண்ணுவதற்கு எட்டு மணி நேரம் செலவிட்டதாக நிதி அமைச்சர் அன்ட்ராஸ் கர்மான்தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் முன்னால் பிரதமர் விக்டர் ஓர்பனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

X