அரபு கட்சிகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கு இஸ்ரேலில் இடமில்லை: பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
gadi eisenkot - netanyahu
Published on: 
Summary

இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தனது கட்சியே மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்று தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவைப்படுகிறது.

கருத்து கணிப்பு

ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் தலா 50 முதல் 52 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் அரபு ஆதரவு கட்சிகளுக்கு இடமில்லை

ஜெருசலேமில் உள்ள லிகுட் கட்சியின் தலைமையகத்தில் நெதன்யாகு ஆற்றிய உரையில், “நாம் ஒரு வலுவான வலதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

யூத மற்றும் சியோனிச பெரும்பான்மையினர் ஒன்றுபட வேண்டும். அரபு கட்சிகளின் ஆதரவு பெற்ற அரசாங்கம் இஸ்ரேலில் அமைவது என்ற கேள்விக்கே இடமில்லை.

ஈரானிய அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம்.

ஈரான் பலவீனமாக உள்ளது

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத அளவில் வலிமையாகவும், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவில் பலவீனமாகவும் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இணைந்து, ஈரானிய அச்சுறுத்தலை நாம் முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று நெதன்யாகு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com