சிரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து- 11 பேர் பலி

சிரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து
சிரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து
Published on

டாமாஸ்கஸ்:

சிரியா நாட்டின் தலைநகர் டாமாஸ்கசில் 6 மாடி கொண்ட வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.

அப்போது வணிக வளாகத்தில் இருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ விபத்தில் சிக்கி 11 பேர் இறந்தனர். பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com