சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஹவுதி ஏவுகணை தாக்குதலில் சேதம்

600 சதுர கிலோமீட்டர் பரப்பளவை அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருந்ததை காட்டின.
ராஸ் தனுரா மீது ஏவுகணை  தாக்குதல்
ராஸ் தனுரா மீது ஏவுகணை தாக்குதல்
Published on: 
Summary

சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஹவுதி தாக்குதலில் சேதமடைந்தது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (புதன்கிழமை) சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா எனும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், அது பலத்த சேதமடைந்தது.

தாக்குதல்

நாசா செயற்கைக்கோள்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவை அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருந்ததைக் காட்டின.

ஹவுதிக்களின் இந்தத் தாக்குதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 82 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது.

சுத்திகரிப்பு நிலையம்

தாக்கப்பட்ட ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம், சவுதி அரேபிய கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 550,000 பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

இந்த நிலையம் அதன் உற்பத்தியில் பெரும்பகுதியை ஏற்றுமதி செய்கிறது.

ஹவுதி ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, இந்தத் தாக்குதலில் சுத்திகரிப்பு ஆலை பலத்த சேதமடைந்து தீப்பிடித்ததாகக் கூறினார்.

சவுதி அரசும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவும், இந்த தாக்குதல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே சவுதி அரேபியா மற்றும் மேற்கத்திய ஆதரவு பெற்ற ஏமன் அரசு செயல்படும் இடைக்கால தலைநகரான ஏடன் நகரை நோக்கி ஹவுதி போராளிகள் தரைவழியாக முன்னேறி வருகின்றனர்.

X