உக்ரைனில் உள்ள உலக சுகாதார அமைப்பின் மருத்துவ கிடங்கு மீது ரஷியா தாக்குதல்

உக்ரைனில் உள்ள மருத்துவ கிடங்கு மீது ரஷியா தாக்குதலை நடத்தியது.
WHO Medical Warehouse
Published on
Summary

உக்ரைனின் கீவ் மாகாணத்தில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பிற்கு சொந்தமான கிடங்கு மீது, ரஷிய படைகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.

போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், உக்ரைன் நாட்டின் போரிஸ்பில் மாவட்டத்தில் உலக சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ கிடங்கு

இந்த கிடங்கின் மீது ரஷியா நடத்திய இந்த தாக்குதலில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்கள் சேதமடைந்தது.

இதையடுத்து சேதமடைந்த மருத்துவ பொருட்களின் இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைய்ன் நாட்டின் மிகப்பெரிய மருந்து கிடங்குகளில் ஒன்றான, போரிஸ்பில் மாவட்டத்தில் உள்ள பயோகான் தளவாட வளாகத்தையும் ரஷிய ஏவுகணைகள் தாக்கியது.

உலக சுகாதார அமைப்பு

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறுகையில், ”உக்ரைன் முழுவதும் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பாதுகாப்பு சூழல் காரணமாக, மருத்துவ பொருட்களை குறைந்த அளவிலேயே சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு சேமிப்பு கிடங்கில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மேலும் ஊழியர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com