உக்ரைனில் 2 ரெயில்கள் மீது ரஷியா டிரோன் தாக்குதல் - 13 பேர் உயிரிழப்பு

10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உக்ரைனில் ரெயில்கள் மீது தாக்குதல்
Published on: 
Summary

உக்ரைனில் 2 ரெயில்கள் மீது ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன், ரஷியா இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி 4 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், ரஷியாவுக்கு சீனா, வடகொரியா நாடுகளும் உதவி வருகின்றன.

அமெரிக்கா முன்னெடுப்பில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன.

ரெயில்கள் மீது தாக்குதல்

இந்நிலையில் மத்திய உக்ரைனில் டினிப்ரோ பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 2 பயணிகள் ரெயில்கள் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டனம்

இது ஒரு ‘பயங்கரவாத தாக்குதல்’ என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா, சீனாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ரஷிய அதிபர் புதின் ஒரு புறம் சம்மதித்த நிலையில் இந்த தாக்குதலானது பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தடையாக உருவெடுத்துள்ளது.

X