உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேட்டோ போன்ற பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க ரஷ்யா தயார்: அமெரிக்க தூதர்

மாஸ்கோவின் படையெடுப்பின் சின்னமாக விளங்கும் அந்த முக்கிய இடத்தின் சாலை பகுதி முடக்கப்பட்டிருந்தது.
Trump and Putin
Published on: 

போர் ஐந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேட்டோவை போன்ற பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதை ரஷியா ஏற்பதாக அமெரிக்க தூதர் ஜாரெட் குஷ்னர் தெரிவித்தார்.

முன்னதாக ரஷிய மற்றும் சீன தலைவர்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உக்ரைன் மற்றும் போரை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதித்ததாக மற்றொரு அமெரிக்க தூதரான ஸ்டீவ் விட்காஃப் கூறினார்.

ரெயில் போக்குவரத்து நிறுத்தம்:

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவுடன் இணைக்கும் முக்கிய கெர்ச் பாலத்தின் மீது நான்கு நாட்களில் உக்ரைன் நடத்திய மூன்றாவது வான்வழி தாக்குதலால், அப்பாலத்தின் குறுக்கே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, குஷ்னரும் விட்காஃபும் பெர்லினில் ஐரோப்பிய நட்பு நாடுகளை சந்தித்து உக்ரைனுக்கான தங்கள் ஆதரவு குறித்து விவாதித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நடந்த தாக்குதல்களில், மாஸ்கோவின் படையெடுப்பின் சின்னமாக விளங்கும் அந்த முக்கிய இடத்தின் சாலை பகுதி முடக்கப்பட்டிருந்தது.

இரவு நேர தாக்குதலுக்கு பிறகு, அதிகாரிகள் சேதங்களை மதிப்பிட்டு கொண்டிருந்தபோது பாலத்தின் குறுக்கே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, ஆனால் பிற்பகலில் அது மீண்டும் தொடங்கியது என்று ரஷிய அரசு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ. நோவோஸ்டி தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்:

சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் டிரம்ப் ஆகியோரை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சங்கடப்படுத்தவும், இந்த போரில் கீவ் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நிரூபிக்கவும், தனது வெற்றி தவிர்க்க முடியாதது என்ற ரஷியாவின் வாதத்தை வலுவிழக்க செய்யவும் உக்ரைனின் இந்த தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டதாக தெரிகிறது.

உக்ரைனின் போர் முயற்சிகளை ஆதரித்து, புதினுடனான டிரம்பின் நேரடி பேச்சுவார்த்தைகளால் தாங்கள் ஓரங்கட்டப்படுவோமோ என அஞ்சும் 40-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய தலைவர்களுடன், குஷ்னர், விட்காஃப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெர்லினில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்தது.

புதினுடனான தனது சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்க தலைவர் பெர்லின் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார் என்று குஷ்னர் கூறினார். சேதத்தை ஒப்புக்கொண்ட புதின், பதிலடி கொடுப்பதாக சூளுரைத்தார்.

X