உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷியா குண்டுவீச்சு.. 3 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

ரஷியா உடனடியாக 300,000 டன்களுக்கும் அதிகமான டீசலை வழங்கும்
உக்ரைனில்  குண்டுவீச்சு
Published on: 
Summary

ரஷியா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனின் சபோரிஷியா பகுதியில் சபோரிஜியாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது நேற்று ரஷியா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் மூன்று குழந்தைகள் அடங்குவர்.

இத்தாக்குதலில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாக, அப்பகுதியின் பாதுகாப்பு மன்றத்தின் இணைத் தலைவர் இவான்பெடோரோவ் தெரிவித்தார்.

மேலும் பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர். அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று இரவு முழுவதும் மேலும் 13 பகுதிகள் தாக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷியாவின் குண்டுவீச்சில் கடந்த நான்கு நாட்களில் 60க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் கொல்லப்பட்டனர்.

டீசல் வியாபாரம்

இதனிடையே அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ரஷியாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷியாவில் பிளேக் நோய் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்காக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

ரஷியா உடனடியாக 300,000 டன்களுக்கும் அதிகமான டீசலை வழங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து நவம்பரில் கூடுதலாக 500,000 டன்களும், அதன் பிறகு விரைவில் 1 மில்லியன் டன்களும் வழங்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். அதன்பிறகு, குறுகிய காலத்தில் கூடுதலாக 3 மில்லியன் டன் டீசலை ரஷ்யா வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரட்டை நாக்கு

டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பு, அவரது முந்தைய கூற்றுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காக ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதால், போரில் ரஷியாவுக்கு இந்தியா நிதியளிப்பதாக டிரம்பும் அமெரிக்க நிர்வாகமும் அடிக்கடி குற்றம் சாட்டி வந்துள்ளன.

ஜெலென்ஸ்கி

போரை நீட்டிக்கக்கூடிய ஒரு முதலீடாக இது இருக்கும் என இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்வினையாக இணையத்தில் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷியா மேலும் பயங்கரவாதம் மற்றும் வஞ்சகத்துடன் உக்ரைனை தாக்கும் என அச்சம் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com