ஏமனில் சவுதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி - சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுதிகள் தாக்குதல்

சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் தலைமை வளாகம் மீது ஹவுதிகள் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி நேற்று தாக்குதல் நடத்தினர்.
Saudi Aramco attack
Published on: 
Summary

ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரப்படும் என ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று சவுதியில் உள்ள எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஏமன் தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி, அதை தொடர்ந்து ஏமனில் உள்ள மற்ற முக்கிய நகரங்களையும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஹவுதிகள் மீது சவுதி அரேபியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக ஏமன் தலைநகர் சனாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோலியம் நிறுவனத்தின் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியது.

ஹவுதி எச்சரிக்கை

இதையடுத்து சனாவில் சவுதி அரேபியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, சவுதி அராம்கோ மற்றும் ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் வீசி ஹவுதிகள் தாக்குதலை நடத்தினர்.

சவுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக சவுதி அமைச்சகம் தெரிவித்தது.

சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் தஹரான் நகரில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் தலைமை வளாகம் மீது ஹவுதிகள் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி நேற்று தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென்றும், சவுதி அராம்கோ நிறுவனத்தின் மேல் மூன்று தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சவுதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com