

சூரியனை சுற்றி வரும்போது 'ஸ்விப்ட் டட்டில்' என்ற வால் நட்சத்திரத்தில் இருந்து உருகும் பனி, தூசி துகள்களாகவும் சிற்சிறிய பாறைகளாகவும் தனியே பிரிந்து விண்ணில் எஞ்சுகிறது.
இவ்வாறு எஞ்சுவனவற்றை விண்வெளி தூசிகள் என்றும் சில நேரங்களில் அவற்றின் அளவை பொறுத்து சிறிய விண்கற்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
அவ்வாறான விண்கற்கள் பெர்செய்ட் (Perseid) என அழைக்கப்படுகின்றன.
பூமி சூரியனை ஒரு முறை முழுமையாக சுற்றி வருவது ஒரு ஆண்டு என்று கணக்கிடப்படுகிறது.
இவ்வாறு பூமியானது சூரியனை சுற்றி வரும்போது விண்வெளியில் உள்ள இந்த பெர்செய்ட் விண்கற்கள் மற்றும் தூசிகள் வளிமண்டலத்திற்குள் நுழைகின்றன.
இவ்வாறாக பிரகாசமாக எரியும் கற்கள் (எரிகற்கள் - எரி நட்சத்திரம்) நெருப்பு பந்துகளை போல மழையாக பொழிவதாக நமக்கு தென்படும். அதுவே விண்கல் அல்லது எரிகல் மழை என்று அழைக்கப்படுகிறது.
இந்த வண்ணமயமான பெர்செய்ட் விண்கற்கள் பொழிவு கோடைக்காலத்தை ஒட்டி இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கிறது.
ஏனெனில் ஆண்டின் இந்த சமயத்தில் பூமியானது சூரியனை சுற்றிவரும்போது விண்வெளியில் உள்ள இந்த பெர்செய்ட் விண்கற்கள் குப்பைகளுடன் மோதுகிறது.
அவை அதிவேகமாக வளிமண்டலத்தில் நுழைவதால் காற்றுடன் ஏற்படும் உராய்வு காரணமாக அவை சூடாகி நெருப்பு பந்துகளை போல ஒளிவிடுகின்றன.
இவற்றை வட அரைக்கோளத்தில், அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பூமியின் ஒரு பாதியில் இருந்து நன்றாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் வட அரைக்கோளத்தில் உள்ள எந்தெந்த நாடுகளில் தெளிவாக தெரியும் என குறிப்பிடப்படவில்லை. ஆகஸ்ட் 12, நாளை இந்த பெர்செய்ட் விண்கற்கள் பொழிவு அதன் உச்சத்தை எட்டும்.
தொடர்ந்து அடுத்த நாள், ஆகஸ்ட் 13, வியாழக்கிழமை, ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஊடாக நிகழ உள்ள சூரிய கிரகனத்துடனும், அதே நாளில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் தோன்றும் 'கிரகங்களின் அணிவகுப்பு'டனும் இந்த விண்கற்கள் பொழிவு நிகழ உள்ளது கூடுதல் சிறப்பு.
தெளிவான வானிலையில் ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள் பொழிவதை காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் 30 முதல் 50 விண்கற்கள் வரை தெளிவாகத் தெரியும்.
இருட்டான இடத்தைத் தேர்வு செய்து, சுமார் 30 நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழக்கப்படும் வரை காத்திருந்து திறந்தவெளியில் இதைக் காணலாம்.
விண்கற்கள் மழையின் உச்சக்கட்டத்தின் போது நிலவு அமாவாசை கட்டத்தில் இருக்கும். இதனால் நிலவின் ஒளி வானத்தை அடைக்காது என்பதால், வழக்கத்தை விட அதிகமான எரிகற்களைத் தெளிவாகக் காண முடியும்.
133 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்விப்ட் டட்டில் சூரியனை சுற்றி வருகிறது. அப்போதே அதன் பனி உருகி பெஸ்ட்ராய்ட்கள் உருவாகின்றன. எனவே இந்தாண்டு நாளை - நாளை மறுநாள் நடக்கும் இந்த நிகழ்வுக்குபின், இது மீண்டும் 2125ல் தான் மீண்டும் இது நிகழும்.
கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பெஸ்ட்ராய்ட்கள் விண்கல் மழை மனிதர்களால் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.