காங்கோ நாட்டில் விமானம் நொறுங்கி விழுந்து 14 பேர் உயிரிழப்பு

விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
Congo Flight Accident
Published on: 

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தென்மேற்கு நகரமான கிக்விட்டில் இருந்து தலைநகர் கின்ஷா சாவிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை குவாங்கோ மாகாணத்தில் உள்ள கெங்கே பகுதியில் தரையிறக்க விமானி முயற்சித்தார்.

அங்கு விமானம் தரையிறங்குவதற்கான தளம் இல்லாத நிலையில் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர்.

இதில் ராணுவ கோர்ட்டின் தலைவர் முடோம்போ கட்டலாய் டியெண்டே, ஆயுதப் படைகளின் தணிக்கை ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய 2 மூத்த ராணுவ அதிகாரிகளும் அடங்குவர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com