பிலிப்பைன்சில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கம்

பயணிகள், பணியாளர்கள் அவசரகால சரிவுப் பாதைகள் வழியாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
Plane
Published on: 

ஆங்காங்கில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்கு ஏர் நியூகினி நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அதில் 137 பயணிகள், 9 பணியாளர்கள் என 146 பேர் இருந்தனர். இந்தநிலையில் விமானத்தின் எந்திரம் ஒன்றில் தீப்பிடித்திருக்கலாம் என்று விமானிகள் எச்சரிக்கை தகவலை அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து விமானம் பிலிப்பைன்சின் தெற்குப் பகுதியில் உள்ள தாவோ சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள், பணியாளர்கள் அவசரகால சரிவுப் பாதைகள் வழியாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X